லடாக் சீனா படைக்குறைப்பு..! மாநிலங்களவையில் ராஜ்நாத்சிங் அறிக்கை

0 1966
லடாக் சீனா படைக்குறைப்பு..! மாநிலங்களவையில் ராஜ்நாத்சிங் அறிக்கை

கிழக்கு லடாக்கில் படைகளை குறைக்கும் நடவடிக்கையைத் தொடங்கியிருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. லடாக் நிலவரம் குறித்து, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு லடாக் எல்லையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முந்தைய நிலைப்பாட்டில் படைகளைத் திரும்பப் பெறுமாறு சீனாவிடம் இந்தியா வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக இருதரப்பிலும் பலசுற்றுப் பேச்சுவார்த்தை இருநாட்டு கமாண்டர்கள் மட்டத்தில் நடத்தப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் 24ம் தேதியன்று 16 மணி நேரம் இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் படைக்குறைப்பு பற்றி பேச்சு வார்த்தை நடத்தினர். இந்நிலையில் கிழக்கு லடாக் பகுதியில் இருந்து படைகளை விலக்கிக் கொள்வதாக சீனா அறிவித்துள்ளது.

அசல் எல்லையை ஒட்டிய பாங்காங் சோ pong gong tso ஏரியின் பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள முன்களப் பணியாளர்களை விலக்கும் பணி தொடங்கியிருப்பதாக சீனாவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் நேற்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக் நிலவரம் குறித்த அறிக்கையை வெளியிட உள்ளார். சீனாவின் படைக்குறைப்பு நடவடிக்கை குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் இதில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments