அரசு வேலை, எம்.பி.சீட் மோசடி அதிரடி காட்டிய தமிழக சிபிசிஐடி

0 1849
அரசு வேலை, எம்.பி.சீட் மோசடி அதிரடி காட்டிய தமிழக சிபிசிஐடி

பிரதமர் மற்றும் ஆளுநர் அலுவலக பெயர்களை பயன்படுத்தி மத்திய அரசு வேலை மற்றும் எம்பி சீட் வாங்கித்தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலை பெங்களூரில் வைத்து தமிழக சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

தேர்தலில் எம்பி சீட் வாங்கி தருவதாக கூறி சென்னையை சேர்ந்த ஜான் என்பவரிடம் ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்த கும்பல் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் பிரதமர் மற்றும் ஆளுநர் அலுவலகங்களில் இருந்து இ - மெயில் அனுப்பவது போல மோசடி நடந்துள்ளது தெரிய வந்தது.

மோசடி நபர் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக தகவல் அறிந்து சிபிசிஐடி போலீசார் அங்கு முகாமிட்டு தேடி வந்தனர்.

தமிழகம் முழுவதும் இருந்தும் கவர்னர் மாளிகைக்கு கொடுக்கப்பட்ட புகார்கள் காவல்துறை டிஜிபிக்கு அனுப்பப்பட்டு அவரது உத்தரவின் படி சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் மைசூரை சேர்ந்த மகாதேவ், அவரது மகன் அங்கித், ஓசூரை சேர்ந்த ஓம் ஆகிய மூவரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கடந்த ஒருவார காலமாக பெங்களூர், மைசூர் போன்ற பகுதிகளில் முகாமிட்டு தேடி வந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் மோசடி கும்பலை கைது செய்து சென்னை அழைத்து வருகின்றனர்.

இவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments