திரைப்படங்கள் முதலில் தியேட்டர் ரிலீஸ் - அடுத்து ஓ.டிடி ரிலீஸ்: தமிழக அரசு யோசனை..!
புதிய திரைப்படங்களை முதலில் திரையரங்குகளிலும், பிறகு காலக்கெடு நிர்ணயித்து, O.T.T -யிலும் வெளியிடுமாறு, திரைப்படத்துறையினருக்கு தமிழக அரசு யோசனை தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, O.T.T -யில் திரைப்படங்களை வெளியிடுவது நல்லது இல்லை என்றார். வருகிற 17 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தூத்துக்குடி மாவட்டத்தில் 2- வது கட்ட தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக, வெள்ளாளன்கோட்டை யில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் கூடுதல் கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர் கடம்பூர்.செ.ராஜு சமுதாய நலக்கூடம் தொடக்க விழா மற்றும் அம்மா நகரும் நியாய விலைக்கடை திறப்பு விழாவிலும் கலந்து கொண்டார்.
Comments