லடாக் எல்லையில் இருந்து இரு நாடுகளும் படைகளை விலக்கத் தொடங்கி உள்ளதாக தகவல்
கிழக்கு லடாக் எல்லையில், பரஸ்பர படைவிலக்கம், மிகுந்த முன்னெச்செரிக்கையுடன், முன்னெடுக்கப்படுவதாக, சீன பாதுகாப்புத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக, சீன பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் ஊ கியான் (Wu Qian), தங்கள் நாட்டின் பிரத்யேக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் உள்ள பாங்காங் சோ ஏரியின், வடக்கு, மற்றும் தெற்கு கரைப் பகுதிகளில், முன்கள படை பிரிவினரை, படிப்படியாக விலக்கிக் கொள்ளும் பணி, தொடங்கியுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வித பாதகமான செயலுக்கும் இடம்கொடாத வகையில், இந்த பரஸ்பர படைவிலக்கம் முன்னெடுக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், நமது இந்திய பாதுகாப்புத்துறை அல்லது வெளியுறவுத்துறை சார்பில், எத்தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Comments