யானை வழித்தடத்தில் உள்ள செங்கல் சூளைகளை தாமதமின்றி அகற்ற தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
யானை வழித்தடத்தில் உள்ள செங்கல் சூளைகளை தாமதமின்றி அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை தடாகம் பகுதியில் யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள 200 செங்கல் சூளைகளை மூடக் கோரி ராஜேந்திரன், முரளிதரன் ஆகியோர் வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வனத்துறையுடன் கலந்தாலோசித்து விதிமீறல் செங்கல் சூளைகளை கண்டறியப்படும் என்றும், இது குறித்து விளக்கம் அளிக்க அவகாசம் வேண்டும் என்றும் கனிமவளத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட துறை சார்ந்த செயலாளர்களுடன் கலந்தாலோசித்து, ஒருங்கிணைந்த பதில் மனுவை தாக்கல் செய்ய தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
Comments