"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
நாமக்கல்லில் எரிவாயு கசிவால் தீப்பிடித்து எரிந்த மாருதி எஸ்டீம் கார்
நாமக்கல்லில், எரிவாயு கசிவால் சாலையில் சென்ற மாருதி எஸ்டீம் (Maruti Esteem) கார் தீப்பிடித்து எரிந்து சேதமானது.
கரூரைச் சேர்ந்த பாரதி என்பவர் தனது குடும்பத்தினருடன் நாமக்கல் சென்றுவிட்டு பின்னர் சொந்த ஊர் திரும்பியுள்ளனர். கேஸில் (Gas) இயங்கும் கார் என்பதால் வழியில் முதலப்பட்டியில் உள்ள பங்கில் பாரதி எரிவாயு நிரப்பியுள்ளார்.
பின்னர் பங்கிலிருந்து சில அடி தூரம் சென்றதும் கார் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. உடனடியாக காரை நிறுத்தி அனைவரும் வெளியேறியதால், காரில் இருந்த 2 வயது குழந்தை உட்பட 4 பேர் உயிர்தப்பினர். தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். எரிவாயு கசிவால் தீ விபத்து நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments