உ.பி.யில் கள்ளச்சாராய கும்பல் தாக்கியதில் காவலர் பலி எஸ்ஐ படுகாயம்..!

0 1177

உத்தர பிரதேசத்தில், கள்ளச்சாராய வழக்கு தொடர்பாக, கிராமம் ஒன்றிற்கு சென்ற காவலர்களில், காவலர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், துணை ஆய்வாளர் கடுமையாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காஸ்கஞ்ச் மாவட்ட கிராமம் ஒன்றில், கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவது தொடர்பான வழக்கில் தேடப்படும் கிரிமினல் மீது, கைது வாரண்ட் அளிக்க போலீசார் சென்றனர்.

அப்போது அவர்கள் கள்ளச்சராய கும்பலால் தாக்கப்பட்டனர். அதில் காவலர் தேவேந்திரா கொல்லப்பட்டதுடன், துணை ஆய்வாளர் அசோக் குமார் என்பவர் படுகாயம் அடைந்தார். ஆபத்தான நிலையில், அலிகார் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இன்று காலை அந்த கிராமத்தில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் ஒரு நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். விஷமிகளால் பறித்துச் செல்லப்பட்ட போலீசாரின் துப்பாக்கிகளை தேடும் பணி நடைபெறுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments