வீட்டிலிருந்தே பழனி பஞ்சாமிர்தத்தைப் பெறும் திட்டம் துவக்கம்
பழனி பிரசாதத்தை வீட்டிலிருந்த படியே பெறும் திட்டத்தை, இந்திய அஞ்சல் துறையுடன் தமிழக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் இணைந்து இன்று தொடங்கியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை குறைந்ததையொட்டி, இந்நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அருகிலுள்ள அஞ்சல் நிலையத்திலோ கோவில் இணையத்திலோ 250 ரூபாய் செலுத்தி பதிவு செய்தால், அரை கிலோ பஞ்சாமிர்தம், விபூதி பிரசாதம் உள்ளிட்டவற்றை வீட்டிலிருந்தே பெற முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments