கடந்த 10 நாட்களில் சர்ச்சைக்குரிய பல டுவிட்டர் கணக்குகள் முடக்கம்-டுவிட்டர் நிறுவனம்
அரசின் கோரிக்கையை ஏற்று கடந்த 10 நாட்களில் பல கணக்குகளை முடக்கி விட்டதாக டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், செய்தி நிறுவனங்கள், செய்தியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் கணக்குகளை முடக்கவில்லை என்றும் அப்படி முடக்குவது, இந்திய சட்டங்களின் படி அவர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்றும் டுவிட்டர் விளக்கம் அளித்துள்ளது.
விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக வன்முறையை தூண்டும் கணக்குகளை முடக்கியது பற்றி இன்று அரசிடம் தெரிவித்துள்ளதாக டுவிட்டர் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி அதன் உத்தரவுகளை மரியாதையுடன் பின்பற்ற உள்ளதாகவும் தனது blog post ல் டுவிட்டர் தெரிவித்துள்ளது.
Comments