ஆந்திராவில் நடந்த முதற்கட்ட பஞ்சாயத்து தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். கட்சிக்கு பெரும் வெற்றி

0 1309
ஆந்திராவில் நடைபெற்ற முதல் கட்ட பஞ்சாயத்து தேர்தல் முடிவுகளில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

ஆந்திராவில் நடைபெற்ற முதல் கட்ட பஞ்சாயத்து தேர்தல் முடிவுகளில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

4 கட்டமாக தேர்தலை நடத்த திட்டமிட்டு முதல்கட்ட தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது.

18 வருவாய் கோட்டங்களில், 2 ஆயிரத்து 734 பஞ்சாயத்துகளுக்கும், 20 ஆயிரத்து 157 வார்டுகளுக்கும் நடந்த தேர்தலில் அன்று மாலையே வாக்குகளை எண்ணும் பணி துவங்கியது.

அதில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் 2ஆயிரத்து 319 பஞ்சாயத்து தலைவர் பதவிகளை கைப்பற்றியுள்ளது. தெலுங்கு தேசம் கட்சிக்கு 44 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

இந்த முதற்கட்ட தேர்தலில், 525 பஞ்சாயத்துக்களில் தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments