திருவள்ளூர் மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகளை பறிமுதல் செய்தது தமிழக அரசு

0 3593
திருவள்ளூர் மாவட்டத்தில் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேல்முறையீட்டு வழக்கில் 2017 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பின்படி ஊத்துக்கோட்டை வட்டம் வேலகாபுரம் கிராமத்திலுள்ள மெடோ அக்ரோ பார்ம்ஸ் என்ற பெயரில் உள்ள சொத்துக்களை அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சொத்துக்களில் இருந்து பெறப்படும் வருவாய் அனைத்தும் அரசுக்கு பாத்தியப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சுதாகரன், இளவரசிக்கு சொந்தமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments