"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
அசாமில் மார்ச் 1 ஆம் தேதி முதல் பொது போக்குவரத்து மையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை - அசாம் சுகாதாரதுறை அமைச்சர் தகவல்
வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் அசாமில் பொது போக்குவரத்து மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டாய கொரோனா பரிசோதனை நிறுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாலும், கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருவதாலும், அசாமில் உள்ள ரயில் நிலையங்கள், விமான நிலையம் உள்ளிட்ட பொது போக்குவரத்து மையங்களில் கட்டாய கொரோனா பரிசோதனையை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மார்ச் 1ஆம் தேதி முதல் கட்டாய கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படாது என அசாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
Comments