'நீ எனக்கு மட்டும்தான் சொந்தம்!' - திருமணமாகாத இளைஞரின் திருமணத்தை தடுத்ததால் பெண் கொலை

0 49283

திருமணமாகாத இளைஞரின் திருமணத்தை தடுத்த பெண் படு கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள சோழம்பட்டு கிராமத்தில் கடந்த 4 ஆம் தேதி முட்புதரில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் காணமுடியாத அளவுக்கு முகம் சிதைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் கிடந்தது. சங்கராபுரம் போலீசார் பெண்ணின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தகவலறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியா உல்ஹக் நேரில் சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டார். இறந்து கிடந்த பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.

திருக்கோவிலூர் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜூ மேற்பார்வையில் சங்கராபுரம் ஆய்வாளர் மற்றும் நான்கு உதவி ஆய்வாளர்கள், குற்றப்பிரிவு போலீசார் என 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த முருகேசனின் மனைவி வெண்ணிலா என்பவர்தான் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் என்பது தெரிய வந்தது. வெண்ணிலாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த திருமணமாகாத ரஜினிகாந்த் என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது . வெண்ணிலாவின் செல்போன் எண்ணை பரிசோதனை செய்ததில்,ரஜினிகாந்திடம் பலமுறை பேசியிருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, தனிப்படை போலீசார் ரஜினிகாந்தை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் , ரஜினிகாந்த் வெண்ணிலாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். ரஜினிகாந்த் திருமணமாகாதவர். ரஜினிகாந்தின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெண் தேடி வந்ததாக சொல்லப்படுகிறது. வெண்ணிலாவோ,' நீ திருமணம் செய்து கொள்ள கூடாது என்னுடனே இருந்து விடு ' என்று ரஜினிகாந்திடத்தில் கூறியுள்ளார்.

மேலும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெண்ணிலா தனக்கு சொந்தமான 2.5 ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து ரூ. 2 லட்சம் ரஜினிகாந்த்துக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. ஒன்று வாங்கிய பணத்தை கொடு அல்லது திருமணம் செய்ய கூடாது என்று வெண்ணிலா ரஜினிகாந்தை வற்புறுத்தியுள்ளார். இதில் , ஆத்திரமடைந்த ரஜினிகாந்த் வெண்ணிலாவை கொலைசெய்ய திட்டம் தீடியுள்ளார். பின்னர், விஐபி நகர் பகுதிக்கு அழைத்து முட்புதரில் வைத்து மது ஊற்றி கொடுத்துள்ளார். வெண்ணிலா மயங்கியதும் இரும்பு ராடால் தலையில் அடித்து கொலை செய்துள்ளார். வெண்ணிலாவின் செல்போன், கொலுசுகள், தங்கச் செயின்களை எடுத்துக் கொண்டு ரஜினிகாந்த் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். ஆனால், செல்போன் பதிவுகளை ஆராய்ந்ததில் கடைசியாக வெண்ணிலா பயன்படுத்திய செல்போன் எண் ரஜினிகாந்தின் எண்ணாக இருந்தது. இதை கொண்டு ரஜினிகாந்தை போலீஸார் கைது செய்தனர். வெண்ணிலாவிடத்தில் இருந்து திருடி சென்ற பொருள்களும் மீட்கப்பட்டன. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments