குடும்பத்துடன் விஷம் குடித்தனர்: கணவன்- மனைவி உயிரிழப்பு; குழந்தைகள் உயிருக்கு போராட்டம்!

0 6310

சேலம் அருகே,குடும்ப தகராறு காரணமாக, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு, கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த புங்கவாடி பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன். வேல்முருகன் நெல் அறுவடைசெய்யும் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார் . இவரின் மனைவி பெயர் சத்யா.  இந்த தம்பதிக்கு சங்கீத் என்ற 11 வயது மகனும், அபிநயா என்ற 10 வயது மகளும் உள்ளனர். வேல்முருகனின் தாயாருக்கும் சத்யவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால், வேல்முருகனும் சத்யாவும் தனியாக வீடு கட்டி வசித்துள்ளனர். 

இந்நிலையில், நேற்று வேல்முருகனின் தாயார், மகன் வீட்டிடுக்கு சென்றபோது, சத்யாவுக்கு  அவருக்கும் வழக்கம்போல வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், சத்யாவுக்கு அறிவுரை கூறியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த சத்யா, கணவன் வேல்முருகன், வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும், 'தனக்கு வாழப் பிடிக்கவில்லை'  என்று தொடர்ந்து கூறியுள்ளார். இதைக் கேட்ட மதுபோதையிலிருந்த வேல்முருகன், சத்யாவிடம் " நீ ஏன் தனியாகச் சாக வேண்டும், குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளலாம்" என்று  கூறியுள்ளார். தொடர்ந்து, கணவன், மனைவி இருவரும் விஷம் அருந்தி விட்டு, தங்கள் பிள்ளைகளான சங்கீதா மற்றும் அபிநயாவுக்கும் கொடுத்துள்ளனர். 

தொடர்ந்து , வேல் முருகன்  தனது நண்பர் ஒருவருக்கு, போன் செய்து தான் குடும்பத்துடன் விஷம் அருந்தியுள்ளதாகக் கூறியிருக்கிறார். அதிர்ச்சியடைந்த வேல்முருகனின் நண்பர் , அவர் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். பதறி அடித்துக்கொண்டு வேல்முருகனின் பெற்றோர் மகனின் வீட்டுக்கு சென்றனர். வேல்முருகன் ,  சத்யா, குழந்தை சங்கீத் மற்றும் அபிநயா ஆகிய நான்கு பேரையும் வேல்முருகனின் பெற்றோர் மருத்துவமனை கொண்டு சென்றனர். வழியிலேயே வேல்முருகன் பரிதாபமாக இறந்தார். சத்யா ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். மகள் அபிநயா அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மகன் சத்யா தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments