தகாத உறவை கண்டித்ததால் அம்மிக்கல் போட்டு அரசு பஸ் கண்டக்டர் கொலை!

0 3850
கொல்லப்பட்ட ராஜேஷ் கைதான மணிமேகலை, மலைச்சாமி

வீரபாண்டி அருகே தகாத உறவை கண்டித்த கணவரை அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி ஆண் நண்பருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம் வீரபாண்டி அருகேயுள்ள கோட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (வயது 45 )) இவர் , உசிலம்பட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பேருந்து நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, மணிமேகலை என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.மணிமேகலை அதே பகுதியில் வசிக்கும் மலைச்சாமி என்பருடன் நான்கு வருடங்களாக தொடர்பில் இருந்துள்ளார். மனைவியின் தகாத உறவை அறிந்த ரஜேஷ் கண்ணன் மணிமேகலையை கண்டித்துள்ளார்.

இதனால்,ஆத்திரமடைந்த இருவரும் தகாத உறவுக்கு இடையூறாக இருந்த ராஜேஷ் கண்ணணை தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர். கோட்டூர் அருகே ராஜேஷ் கண்ணாவுக்கு தென்னந்தோப்பு உள்ளது.தோப்பில் உள்ள மாட்டுத் தொழுவில் நேற்றிரவு ராஜேஷ் கண்ணன் உறங்கியுள்ளார். இது பற்றி மணிமேகலை ஆண் நண்பர் மலைச்சாமியிடம் தகவல் கூறியுள்ளார். தோட்டத்துக்கு சென்ற மலைச்சாமி தோட்டத்தில் நல்ல உறக்கத்தில் இருந்த ராஜேஷ் கண்ணன் மீது அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துள்ளார்.

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று ராஜேஷ் கண்ணனின் உடலை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீரபாண்டி காவல் ஆய்வாளர் பாலகுரு தலைமையில் தீவிர விசாரணை நடைபெற்றது.விசாரணையில் மணிமேகலை முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறியதால், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்றது.விசாரணையில் மணிமேகலை மலைச்சாமியுடன் சேர்ந்து ராஜேஷ் கண்ணனை கொலை செய்தது தெரிய வந்தது. தொடர்ந்து, மலைச்சாமி, மணிமேகலை இருவரும் கைது செய்யப்பட்டனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments