நள்ளிரவில் அணையிலிருந்து தண்ணீரை திறந்துவிட்ட விஷமிகள் : விளை நிலங்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே முன் அறிவிப்பின்றி சட்டவிரோதமாக நள்ளிரவில் விஷமிகள் அணையை திறந்ததால், ஏராளமான பயிர்கள் நீரில் மூழ்கியது.
கடந்த டிசம்பர் மாதம் பெய்த தொடர் கனமழையால் விசுவக்குடி அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, விசுவக்குடி, வெங்கலம் பகுதிகளுக்கு கால்வாய் மூலம் உபரிநீர் திறந்து விடப்பட்டது.
இதேபோல் அன்னமங்கலம், அரசலூர் பகுதிக்கும் வாய்க்கால் அமைத்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில், விசுவக்குடி பகுதியை சேர்ந்த விஷமிகள் சிலர் மற்ற பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்கக்கூடாது என்ற உள்நோக்கத்துடன் நகராட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் நள்ளிரவில் அணையில் இருந்து தண்ணீரை திறந்ததுள்ளனர்.
இதனால் விசுவக்குடி கிராமத்தை சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்ததுடன், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளத்தாக வேதனை தெரிவித்த விவசாயிகள், விஷமிகளை கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Comments