உத்தரகாண்ட் பனிச்சரிவு: சுரங்கத்திற்குள் சிக்கிய 35 பேரின் நிலை என்ன?

0 2346
சுரங்கத்திற்குள் சிக்கிய 35 பேரின் நிலை என்ன?

உத்தரகாண்ட்டில் சுரங்கத்திற்குள் சிக்கியிருக்கும் 35 தொழிலாளர்களை மீட்கும் பணி தொய்வின்றி நடைபெற்று வந்த போதிலும், 120 மீட்டர் வரையே உள்ளே செல்ல முடிவதால் மீட்பு பணி சவாலாக மாறி உள்ளது. 

உத்தரகாண்ட் மாநிலம் சமாலி மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிலச்சரிவு மற்றும் பனிச்சரிவு காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதுவரை உயிரிழந்தவர்களின் 32 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தபோவன் பகுதியில் இருந்த சுரங்கத்திற்குள் சுமார் 35 தொழிலாளர்கள் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதால் தொடர்ந்து இடைவிடாமல் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. ராணுவம், இந்தோ திபெத்தியன் எல்லை போலீஸ் மற்றும் மத்திய, மாநில மீட்பு படையினர், உள்ளூர் நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் இணைந்து சுரங்கத்திற்குள் நிரம்பியிருக்கும் சேறு மற்றும் சகதியை அகற்றி வருகின்றனர். தோண்ட தோண்ட சகதியும், தண்ணீரும் வந்து கொண்டே இருப்பதால் மீட்பு பணி சவாலானதாக மாறி இருக்கிறது.

சுமார் இரண்டரை கிலோ மீட்டர் நீளமுள்ள சுரங்கத்தில் தற்போது 120 மீட்டர் வரை சகதி அகற்றப்பட்டு, மீட்பு குழுவினர் உள்ளே செல்ல முடிகிறது. டிரோன் கேமராவும் மீட்பு பணிக்கு பயன்படுத்தப்படுகிறது. எனினும் இன்னும் உள்ளே சிக்கியிருக்கும் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

சுரங்கத்திற்குள் காற்று அடைத்திருக்கும் பகுதி ஏதும் இருக்கிறதா என்பதை அறிய லேசர் தொழில்நுட்பமும் ஹெலிகாப்டர் மூலம் பயன்படுத்தப்பட்டது. காற்று அடைப்பை கண்டுபிடித்தால் உள்ளே சிக்கியிருப்பவர்கள் எந்த இடத்தில் இருக்கிறார்கள் என்பதை எளிதில் அடையாளம் காண இயலும். உள்ளே சிக்கியிருப்பவர்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு அருகி வரும் நிலையிலும், 3வது நாளாக நம்பிக்கையுடன் மீட்பு குழுவினர் பணியை தொடர்ந்து வருகின்றனர். உள்ளே சிக்கியிருக்கும் 35 தொழிலாளர்களையும் சேர்த்து மொத்தம் 205 பேர் மாயமாகி இருப்பதாக உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments