முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான தகுதி நீக்கத் தீர்மானம்... டிரம்ப்புக்கு எதிராக 56 பேர், ஆதரவாக 44 பேர் வாக்களிப்பு
முன்னாள் அமெரிக்க அதிபர் மீதான தகுதி நீக்கத் தீர்மானம் மீதான இரண்டாம் கட்ட விசாரணையை செனட் சபை நடத்தியது.
இதில் டிரம்ப்பை இனி அதிபர் பதவிக்குப் போட்டியிடும் தகுதியை நீக்குவதற்கான நடவடிக்கையைத் தொடரலாம் என்று செனட் உறுப்பினர்கள் வாக்களித்தனர். டிரம்ப்புக்கு எதிராக 56 வாக்குகளும் ஆதரவாக 44 வாக்குகளும் பதிவாகின.
கடந்த ஜனவரி மாதம் 5ம் தேதி நாடாளுமன்றத்தின் மீது டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறைத் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். ஆவேசமாக பேசி தமது ஆதரவாளர்களைத் தூண்டிவிட்டதற்கு காரணமானவர் என்று டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
டிரம்ப் பதவியை விட்டு விலகிய பின்னர் அவரை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்ற அவருடைய வழக்கறிஞர்களின் வாதத்தை செனட் சபையினர் ஏற்கவில்லை.
Comments