வூகான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்க வாய்ப்பில்லை- WHO திட்டவட்டம்

0 3572
கொரோனா வைரஸ் ஊகான் ஆய்வுக்கூடத்தில் இருந்து பரவவில்லை: ஊகான் சந்தையில் இருந்து வைரஸ் பரவியதற்கு ஆதாரமில்லை- WHO

கொரோனா வைரஸ் சீனாவின் ஊகான் ஆய்வுக் கூடத்தில் இருந்து பரவவில்லை என்று உலக சுகாதார அமைப்பின் விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

14 பேர் கொண்ட குழுவினர் ஜனவரியில் சீனா சென்று கடந்த ஒருமாதகாலமாக ஆய்வு நடத்தியது.. கொரோனா வைரஸ் எங்கிருந்து பரவியது என்பதற்கான தடயவியல் ஆய்வுகளை இக்குழுவினர் மேற்கொண்டனர்.

இந்நிலையில் நேற்று மாலையில் சிறிய தாமதத்திற்குப் பின்னர் இக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனாவின் மூலக்கூறுகள் ஊகானிலோ சீனாவின் வேறு எந்தப் பகுதியிலோ இருந்ததற்கான ஆதாரம் ஏதுமில்லை என்று அக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஊகானில் அந்த கொடிய வைரஸ் பரவுவதற்கு முன்பே அது வேறு மாகாணங்களில் பரவியிருக்கலாம் என்றும் சீனாவின் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். சீனாவின் அறிவிப்புகளுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதாக குற்றம் சாட்டிய அமெரிக்கா அந்த அமைப்புக்கு அளித்து வந்த நிதியுதவியை நிறுத்திக் கொண்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments