”தமிழகத்தில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை” - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்து 74 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும் அவர்களில் ஒருவருக்கு கூட எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் எவ்வித அச்சமும் இன்றி தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
புதுக்கோட்டையில் ஆட்சியர் உமா மகேஸ்வரி மற்றும் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
Comments