சென்னை விமான நிலையத்தில் கத்தாருக்கு கடத்தப்பட இருந்த ரூ 5.1 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்
சென்னையில் இருந்து கத்தாருக்கு கடத்தப்பட இருந்த 5 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ரகசியத் தகவலின் அடிப்படையில் கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்பட இருந்த 55 டிஜிட்டல் எடை பார்க்கும் கருவிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அவற்றின் எடை வழக்கத்தை விட கூடுதலாக இருந்ததால், அதிகாரிகள் அவற்றை பிரித்து பார்த்த போது, ஒவ்வொரு கருவியிலும் 1 கிலோ வீதம், 44 கருவிகளில் இருந்து 44 கிலோ கஞ்சா சிக்கியது.
எஞ்சிய கருவிகளில் இருந்து 70 லட்ச ரூபாய் மதிப்பிலான மெத்தபிடமைன் போதை மாத்திரைகள் மற்றும் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட Pregabalin மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, ஸ்ரீ ஆலயா ஏற்றுமதி நிறுவன உரிமையாளரையும், அவருக்கு உதவிய சுங்கத்துறை ஊழியரையும் கைது செய்தனர்.
Comments