போதிய பலன் இல்லை - அஸ்ட்ரா ஜெனெகா கொரோனா தடுப்பூசிக்கு தென்னாப்பிரிக்காவில் தடை
போதிய பலன் அளிக்காததால் ஆக்ஸ்போர்டு - அஸ்ட்ராஜெனேகா இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு தென்ஆப்பிரிக்கா தற்காலிக தடைவிதித்துள்ளது.
லேசான கொரோனா பாதிப்பு மற்றும் உருமாறிய கொரோனாவுக்கு எதிராக போதிய பலன் அளிக்காததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஞ்ஞானிகள் குழு தடுப்பூசி செலுத்தும் பணியை தொடர சிறந்த வழி குறித்து ஆலோசனை வழங்கும் வரை தடை நீடிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு- அஸ்ட்ராஜெனேகா நிறுவனத்தின் மருந்தை இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.
Comments