தென் சீன கடற்பகுதிக்கு அமெரிக்காவும், சீனாவும் போட்டிப்போடுவதால் பதற்றம்; பிரான்ஸ் போர்க்கப்பலுடன் இணைந்து அணுசக்தி நீர்மூழ்கி கப்பலும் ரோந்து
அமெரிக்காவும், சீனாவும் முட்டிமோதும், சர்ச்சைக்குரிய தென் சீன கடல் பகுதியில், பிரான்ஸ் கடற்படை போர்க்கப்பலுடன், அந்நாட்டின், அணுஆயுத தாக்குதல் நீர்மூழ்கி கப்பலும், ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கிறது.
இந்த தகவலை, பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர், புளோரன்ஸ் பார்லி , டுவிட்டரில் உறுதிபடுத்தியுள்ளார்.
தென்சீனக் கடலுக்கு சொந்தம் கொண்டாடி வரும் சீனா அப்பகுதியில் செயற்கைத் தீவுகளை அமைத்துள்ளது.
சீனாவின் இந்த நிலைப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளின் போர்க்கப்பல்கள், ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவின் நட்பு நாடான பிரான்ஸ் சார்பாக, தென் சீனக் கடல் பகுதியில், செய்ன் என்ற கடற்படைப் போர்க்கப்பலுடன், Emerald என்ற அணுசக்தி நீர்மூழ்கி கப்பலும் இணைந்து ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
Comments