வதந்திகளை நம்பாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்களப் பணியாளர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் அறிவுறுத்தல்

0 979
வதந்திகளை நம்பாமல், செவிலியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் வரும் 20ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

வதந்திகளை நம்பாமல், செவிலியர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் வரும் 20ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் காணொலி வாயிலாக நடைபெற்ற மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

தமிழகத்தில் 34 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளதாகக் கூறினார்.

இருப்பினும் பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments