டெல்லி வன்முறை தொடர்பாக தவறான கருத்து வெளியிட்ட புகாரில் சசிதரூர் உள்ளிட்ட 7 பேரை கைது செய்ய இடைக்கால தடை -உச்சநீதிமன்றம்

0 1189
டெல்லியில் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக தவறான கருத்து வெளியிட்ட புகாரில், காங்கிரஸ் எம்பி சசிதரூர் மற்றும் பத்திரிகையாளர்கள் 6 பேரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 26 ஆம் தேதி விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் ஒருவர் பலியானது குறித்து உண்மைக்கு மாறான தகவலை வெளியிட்டதாக சசிதரூர் உள்ளிட்டோர் மீது டெல்லி, மத்தியப்பிரதேசம் மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அதற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்தது.

கைது நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments