வாக்காளர் பட்டியலில் மேலும் 2 லட்சம் பேர் இணைய விண்ணப்பம் , வாக்குச்சாவடிகள் 93,000ஆக உயர்வு: தலைமை தேர்தல் அதிகாரி

0 1921
சட்டப்பேரவை தேர்தல் தேதியை இறுதி செய்யும் வகையில், மாநில மற்றும் உள்ளூர் விடுமுறை தேதிகளை, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல் தேதியை இறுதி செய்யும் வகையில், மாநில மற்றும் உள்ளூர் விடுமுறை தேதிகளை, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின், வாக்காளர் பட்டியலில் இணைய மேலும் 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக கூறியுள்ளார்.

மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் 100 சதவீதம் தயார் நிலையில் உள்ளதோடு, வாக்குசாவடிகள் 67 ஆயிரத்தில் இருந்து 93 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments