ராசிபுரம் : ஒரே இரவில் 11 திருட்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் ; 4பேர் கைது!

0 4282
பலே பைக் திருடர்கள் பஞ்சரான கதை : ஒரே இரவில் 11 வாகனங்கள் பறிமுதல் ; 4பேர் கைது!

ராசிபுரத்தில் ஒரே இரவில் 11 வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 4 பேரை அதிரடியாக கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

நாமக்கல் மாவட்டத்தில் வாகன திருட்டு அதிகரிப்பதாக எழுந்த புகாரையடுத்து, ராசிபுரம் போலீசார்  இரவு நேரத்தில் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, ஆண்டலுர்கேட் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில், இருசக்கர வானத்தில் வந்த இரண்டு வாலிபர்களை நிறுத்தி விசாரித்தனர்.  இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். 

பிடிபட்டவர்களில்  ஒருவர் ஆத்தூரை அடுத்த சிறுவாச்சூரை சேர்ந்த ரவிக்குமார் என்பதும், மற்றொருவர் பரமத்தி வேலூரை சேர்ந்த பூபாலன் என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும்  கூட்டாளிகளான சுங்கவள்ளியை சேர்ந்த தனபால் மற்றும் கோபிநாத் ஆகியோருடன் சேர்ந்து சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இருந்து 11 இருசக்கர வாகனங்களை திருடியது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேரையும், ராசிபுரம் போலீசார் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்கள் திருடிய 11 இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments