மரக்கிளை விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரம்... அரசு பேருந்து நடத்துனரை வெட்டிக்கொலை செய்த அண்டை வீட்டுக்காரர்கள்

0 21407

விருதுநகர் அருகே முன்விரோதம் காரணமாக அரசு பேருந்து நடத்துனரை வெட்டிக்கொலை செய்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

இ.குமாரலிங்கபுரத்தை சேர்ந்த சந்தனமகாலிங்கம் சாத்தூர் டிப்போவில் நடத்துனராக பணியாற்றி வந்தார். இவருக்கும் அண்டை வீட்டில் வசித்து வரும் சந்திரசேகர் என்பவருக்கும் கழிவுநீர் செல்வது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று சந்தனமகாலிங்கம் தனது வீட்டிற்கு இடைஞ்சலாக உள்ள  மரத்தை வெட்டியதில் மரத்தின் கிளை முறிந்து அருகில் உள்ள வீடுகளுக்கு செல்லும் மின்சார வயர் மீது விழுந்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகர் தனது தம்பி குணசேகரன் மற்றும் ஐயப்பன் என்பவருடன் சேர்ந்து சந்தனமகாலிங்கத்தை வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments