மணமகளின் கன்னத்தை பிடித்து போட்டோ எடுத்த போட்டாகிராபர்... காண்டான மணமகன்.. வைரல் வீடியோவின் காரணம் இது தானா ?

0 44052

மணமேடையில் தன்னை மட்டுமே வளைத்து வளைத்து போட்டோ எடுத்த புகைப்படக்காரரை மணமகன் அடிப்பதை பார்த்து கீழே விழுந்து சிரிக்கும் மணமகளின் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அதற்கான உண்மை காரணம் தெரிய வந்துள்ளது.

அண்மையில் வெளியான வீடியோ ஒன்றில் மணமகனும், மணமகளும் திருமணக்கோலத்தில் மணமேடையில் நின்றிருக்க அவர்களை போட்டோ எடுத்த புகைப்படக்காரர், மணகளை மட்டும் வளைத்து வளைத்து போட்டோ எடுத்ததுடன், மணமகளின் கன்னத்தை பிடித்து போஸ் கொடுக்க சொல்லிக் கொண்டிருப்பார். அப்பொழுது அருகிலிருந்த மணமகன் கடுப்பாகி அந்த புகைப்படக்காரரை அடித்தது மட்டுமின்றி மணமேடையில் இருந்தே வெளியேறுமாறு கூறுவார். மணமகனின் இந்த செயலை பார்த்து சிறிதும், வருத்தமோ, கோபமோ கொள்ளாத மணமகள் தரையில் விழுந்து வாய்விட்டு சிரிக்கும் காட்சி இணையத்தில் வைரலானது.

திருமணக்கோலத்தில் மணமகனின் செயலால் கோபம் கொள்ளாமல் சிரிப்பை வெளிப்படுத்திய மணமகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தார். மணமகளின் வீடியோ அதிகளவில் பகிரப்பட்டது. மணமகன் அடித்ததும் போட்டோ எடுத்த புகைப்படக்காரரும் கோபம் கொள்ளாமல் சிரிப்பை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் அங்கு நடந்தது உண்மை திருமணமா அல்லது நாடகமா என்ற கேள்வி எழுந்த நிலையில் அதற்கான விடை கிடைத்துள்ளது.

அந்த வீடியோவில் இருக்கும் மணமகள் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த நடிகை அனிகிரிதி சவ்ஹான் . 'Darling Pyaar Jhukta Nahi' என்ற திரைப்படத்தில் அனிகிரிதி நடித்து வரும் நிலையில், அதில் இடம்பெற்ற காட்சி ஒன்று தான் திருமணக்கோலத்தில் மணமகள் சிரிக்கும் வைரல் வீடியோ. இதனை உறுதிப்படுத்தியுள்ள அனிகிரிதி தனக்கு திருமணமாகவில்லை என்றும், திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி Renuka Mohan என்பவரால் பகிரப்பட்டு வைரலானதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி படப்பிடிப்பின் போதும், படக்குழுவினருடனும் எடுக்கப்பட்ட வேறு சில புகைப்படங்களையும் அனிகிரிதி பகிர்ந்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments