அனைத்து நீர்நிலைகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகளின் முழு விவரங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

0 1125

மிழ்நாட்டின் அனைத்து நீர்நிலைகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து பணிகளின் முழு விவரங்களையும், புதிதாக இணையதளம் தொடங்கி அதில் பதிவேற்றம் செய்ய தமிழக அரசுக்கு  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

பொது நல மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, குடிமராமத்து பணி என்பது ரகசிய பணி அல்ல என கருத்து தெரிவித்தது. பணிகள் வெளிப்படையாக நடைபெறும்போது ஊழல், முறைகேடுகளை குறைக்க முடியும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

குடிமராமத்து பணிகள் நடைபெறுவதற்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படம், பணி முடிவடைந்த பின் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகியவற்றையும் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் எனவும், இந்த உத்தரவை 12 வார காலத்தில் அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments