செவ்வாய் கிரகத்தை இன்று அடைய உள்ளது ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆய்வு விண்கலம்

0 5842

க்கிய அரபு அமீரகம், செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய அனுப்பிய எமிரேட்ஸ் மார்ஸ் மிஷனின் ஹோப் ஆர்பிட்டர் இன்று செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் நுழையவுள்ளது.

சுற்றுப்பாதையில் சுற்றிவந்தபடி ஆய்வு செய்ய உள்ள இந்த ஆர்பிட்டர், செவ்வாயின் வளிமண்டலம் குறித்த தரவுகளை அனுப்புமென தகவல்கள் வெளியாகியுள்ளது.

செவ்வாய் கோளின் தினசரி மற்றும் பருவகால மாற்றங்களை தொடர்ந்து ஆராய்ந்து செவ்வாய் வளிமண்டலம் குறித்த முழுமையான தகவல்களை ஹோப் ஆர்பிட்டர் வழங்குமென எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலையில் ஏவப்பட்ட இந்த திட்டத்திற்காக 200 மில்லியன் டாலர்களை ஐக்கிய அரபு அமீரகம் செலவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments