"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
தஞ்சை மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துகள் அரசுடமை - தஞ்சை மாவட்ட ஆட்சியர்
தஞ்சை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சில சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டன.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருவரின் மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்களை அரசுடமையாக்க உத்தரவிட்டு இறுதி தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தஞ்சை வ.உ.சி. நகரில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 3 வீட்டு மனைகள் அரசுடமையாக்கப்பட்டதாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இதேபோல், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 800 ஏக்கர் ரிவர்வே அக்ரோ ப்ராடக்ட் பிரைவேட் லிமிடெட் இடத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அரசுடமை ஆக்கினார்.
Comments