ராமாவரம் தோட்டத்தின் நுழைவாயில் அருகே அ.ம.மு.க கொடிக் கம்பம் அகற்றப்பட்ட விவகாரம் : எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

0 899
ராமாவரம் தோட்டத்தின் நுழைவாயில் அருகே அ.ம.மு.க கொடிக் கம்பம் அகற்றப்பட்ட விவகாரம் : எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை ராமாவரம் தோட்டத்தின் நுழைவாயில் அருகே, சசிகலா கொடியேற்றுவதற்காக அமைத்த அமமுக கொடிக் கம்பம் அகற்றப்பட்டு விட்டதா என சரிபார்த்து தெரிவிக்கும்படி எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள்களாக கீதா, ராதாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அவர்கள் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் சுப்பையா மற்றும் சத்தி சுகுமார குரூப் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கொடிக்கம்பம் அகற்றப்பட்டு விட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மனுவுக்கு பிப்ரவரி 11ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments