அர்ஜென்டினாவில் அதிபரை கண்டித்து ஏராளமான பொதுமக்கள் அரசுக்கு எதிராக பேரணி
அர்ஜென்டினா நாட்டில் அதிபர் Alberto Fernandez க்கு எதிராக நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
தலைநகர் Buenos Aires ல் அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கைகளை கண்டித்து இந்த போராட்டம் நடைபெற்றது.
வறுமை மற்றும் பணவீக்கம் என்பது தொற்று நோயாகும் என்ற முழக்கத்துடன் பேரணியில் பங்கேற்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா காரணமாக அர்ஜென்டினாவில் ஏராளமானோர் வேலை வாய்ப்பை இழந்து கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி உள்ளதாக புள்ளி விவர குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
Comments