அமெரிக்காவில் 24 மணி நேர கொரோனா தடுப்பூசி மையம் : அதிபர் பைடன், துணை அதிபர் கமலா ஹாரீஸ் நேரில் பார்வை
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி மையத்தை அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் நேரில் பார்வையிட்டனர்.
அங்குள்ள State Farm மைதானத்தில் 24 மணி நேர கொரோனா தடுப்பூசி மையம் செயல்பட்டு வருகிறது.
அரிசோனா மாகாண சுகாதார இயக்குநர் Dr. Cara Christ அந்த மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இருவருக்கும் விளக்கி கூறினார்.
கடந்த மாதம் 12ந்தேதியில் இருந்து இடைவிடாமல் இயங்கி வரும் இந்த மையத்தில் இதுவரை சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
Comments