ஜேஇஇ தேர்வுகளைப் போல நீட் தேர்வையும் ஆண்டுக்கு பலமுறை நடத்த மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்
உயர் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ தேர்வுகளைப் போல மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வையும் ஆண்டுக்கு பலமுறை நடத்த மத்திய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசிய மத்திய அரசு அதிகாரி, கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பரில் நீட் தேர்வு நடத்தப்பட்டதாகக் கூறிய அவர், 2021ம் ஆண்டுக்கான தேர்வுத் தேதிகள் அறிவிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
நடப்பாண்டில் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படும் என்று குறிப்பிட்ட அந்த அதிகாரி, இந்தத் தேர்வுகளைப் போலவே நீட் தேர்வையும் குறைந்தபட்சம் ஆண்டுக்கு இருமுறை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஜேஇஇ தேர்வுகளைப் போல நீட் தேர்வையும் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை நடத்த கல்வி அமைச்சகம் பரிசீலித்து வருவதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஏற்கனவே கூறியிருந்தார்.
Comments