ஓ எல் எக்ஸ் தளம் மூலம் டெல்லி முதலமைச்சர் மகளிடம் பணமோசடி

0 2491

பழைய பொருள் விற்பனைத் தளமான ஓ எல் எக்ஸ மூலம் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் மகளிடம் 34 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

தன்னிடம் உள்ள பழைய சோபாவை விற்பதாக ஓ எல் எக்ஸ் தளத்தில் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா விளம்பரம் செய்துள்ளார். இதனைக் கண்ட நபர் ஒருவர் ஹர்ஷிதாவின் வங்கிக் கணக்கில் சிறிதளவு பணம் செலுத்தியுள்ளார். தொடர்ந்து க்யூ ஆர் கோடை அவரது மொபைல் போனுக்கு அந்த நபர் அனுப்பியுள்ளார்.

அதனை ஸ்கேன் செய்தால் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய ஹர்ஷிதா அதன்படியே செய்ய, இறுதியில் ஹர்ஷிதாவின் வங்கிக் கணக்கில் இருந்து 34 ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments