ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியுடன் பிரதமர் மோடி மெய்நிகர் உச்சிமாநாட்டில் பங்கேற்பு
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனியுடன் மெய்நிகர் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
மாநாட்டில் காபூலில் வசிக்கும் 20 லட்சம் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவது, ஷாஹூத் அணை தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது குறித்து இருநாட்டுத் தலைவர்களும் பேசியதாகக் கூறப்படுகிறது. .
ஆப்கானிஸ்தானின் ஹீராட் மாகாணத்தில் இந்தியா கட்டமைத்து வரும் இரண்டாவது அணை ஷாஹூத் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக 75 ஆயிரம் டன் கோதுமை, 20 டன் உயிர் காக்கும் மருந்துகள், 5 லட்சம் கொரோனா மருந்துகளை ஏற்கனவே ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments