நிதிப் பற்றாக்குறையைக் கண்காணிக்க அரசு நடவடிக்கை.. கடன் வாங்கவோ செலவு செய்யவோ அரசு தயாராக உள்ளது- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
நிதிப் பற்றாக்குறையைக் கண்காணிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மத்திய பட்ஜெட்டை ஒளிவு மறைவற்றதாக அரசு மாற்றியுள்ளது என்றும், அரசு கடன் வாங்கவோ செலவு செய்யவோ தயாராக உள்ளது என்றும் கூறினார்.
குறைந்தபட்ச அரசு - அதிகபட்ச ஆட்சி என்ற கொள்கையால் மத்திய அரசு நடந்து வருவதாக கூறிய நிர்மலா சீதாராமன், இம்முறை மத்திய பட்ஜெட்டும் அதே தத்துவத்தின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
Comments