சொத்துக்காக அண்ணனை கொலை செய்த தம்பி காவல் நிலையத்தில் சரண்
சென்னை கொளத்தூரில் சொத்துக்காக அண்ணனை குத்தி கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர். கொளத்தூர் காமராஜர் முதல் தெருவை சேர்ந்த பழனி என்பவருக்கும் அவரது தம்பி தமிழ்ச்செல்வனுக்கும் சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பழனி தனது வீட்டு வளாகத்தில் இருந்த அடிபம்பு குழாயில் தண்ணீர் பிடிக்க வந்தபோது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பு உருவாகியுள்ளது.
அப்போது தமிழ்ச்செல்வன் மறைத்து வைத்திருந்த கத்தியால் பழனியின் மார்பு பகுதியில் குத்தி கொலை செய்தார். அக்கம்பக்கத்தினர் தமிழ்ச்செல்வனை பிடிக்க முயற்சித்த நிலையில் அங்கிருந்து தப்பிய அவர், காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
Comments