எம்.டெக் படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் - அண்ணா பல்கலைக்கழகம்
எம்.டெக்., பயோடெக்னாலஜி மற்றும் எம்.டெக்., கம்ப்யூட்டேஷனல் டெக்னாலஜி படிப்புகள் தொடர்ந்து நடத்தப்படும் என உயர்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழகம் உறுதி அளித்துள்ளது.
எம்.டெக்., படிப்புகளுக்கு தமிழக இடஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கைக்கு உத்தரவிடகோரி மாணவிகள் சித்ரா மற்றும் குழலி இருவரும் தொடர்ந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இரு எம்.டெக் படிப்புகளும் தொடர்ந்து நடத்தப்படும் என உறுதி அளித்தார்.
அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் வழக்கறிஞர், இடஒதுக்கீடுக்கும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கும் தொடர்பில்லை எனவிளக்கம் அளித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இதுசம்பந்தமாக எழுத்துப்பூர்வமான விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 12 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Comments