தமிழ் மொழி மீது பற்று : பண்டைய தமிழர் சடங்குகளோடு திருமணம் செய்து கொண்ட ஜோடி : பாரம்பரிய கலை நிகழ்ச்சியுடன் மிகுந்த வரவேற்பு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இரு வேறு மதங்களைச் சேர்ந்த மணமக்கள் மதச்சடங்குகள் இன்றி, பண்டைய தமிழர் முறைப்படி மணம் முடித்த நிகழ்வு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
மணமக்கள் ராஜன் மற்றும் பிரீத்தி ஆகிய இருவரும் தமிழ் மொழி மீது கொண்ட பற்று காரணமாக பெற்றோர்கள் சம்மதத்துடன் பண்டைய தமிழர் சடங்குகளோடு திருமணம் செய்து கொண்டனர்.
மஞ்சள் கிழங்கால் ஆன தாலி கட்டியதும் மணமகனுக்கு 23 வகையான தானியங்களில் ஆரத்தி எடுக்கப்பட்டது. திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் விதைப்பந்து பரிசாக அளிக்கப்பட்டது. மண நிகழ்ச்சியில் பாரம்பரிய தமிழ் கலைகளான சிலம்பாட்டம், பறையாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
Comments