பறவைகள் மோதாமல் இருக்க காற்றாலைகளில் ஆரஞ்சு நிற பெயிண்ட் அடிக்க கோரி வழக்கு
பறவைகள் மோதாமல் இருக்க காற்றாலைகளில் ஆரஞ்சு நிற பெயிண்ட் அடிக்க கோரிய வழக்கில், மத்திய சுற்றுசூழல் பருவநிலைத்துறை செயலர், தமிழக ஆற்றல் துறை செயலர், மின்சார வாரிய சேர்மன் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், குளிர்காலங்களில் வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் தமிழகத்திற்கு வருவதால், காற்றாலைகளில் மோதியும், உயர் மின் கம்பிகளில் மின்சாரம் தாக்கியும் உயிரிழப்பதாகவும், பறவைகள் மின்சாரம் தாக்கி இறக்காத வண்ணம், காற்றாலைகளுக்கு ஆரஞ்சு நிற பெயிண்ட் அடிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, அரசுத் தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய உத்தவிட்டு, மார்ச் 8ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
Comments