விவசாயிகள் போராட்டம் குறித்து தவறான தகவல் வெளியிடும் டிவிட்டர் கணக்குகளை முடக்க டிவிட்டர் நிர்வாகத்திடம் மத்திய அரசு வலியுறுத்தல்

0 1115

டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து தவறான தகவல் வெளியிட்டு வன்முறையை தூண்ட முயலும் சுமார் 1200 பேரின் கணக்குகளை முடக்கவோ அல்லது நீக்கவோ வேண்டும் என்று டிவிட்டர் நிர்வாகத்திடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அனுப்பிய அறிக்கையில், இந்த கணக்குகள் பாகிஸ்தான் அல்லது காலிஸ்தான் ஆதரவாளர்களுடையது என்று பாதுகாப்பு முகமைகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது குறித்து டிவிட்டர் நிர்வாகம் தரப்பில் இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments