ரோலக்ஸ் பேக்கிரியில் ராகி பிஸ்கட்டை புழுவோடு வைத்து விற்பனை செய்ததாக பேக்கரி ஓனர் மீது புகார்... அச்சத்தில் தாம்பரம் வாடிக்கையாளர்கள்

0 3675

சென்னை தாம்பரத்தில் பேக்கரி ஒன்றில் வாங்கிய ராகி பிஸ்கட்டில் புழு இருந்ததாக எழுந்த புகாரை அடுத்து, அங்கு உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

தாம்பரம் ராஜாஜி சாலையில் இயங்கி வரும் ரோலக்ஸ் பேக்கிரியில் கணேசன் என்பவர் ராகி பிஸ்கட்டை வாங்கியுள்ளார்.

வீட்டில் சென்று பார்த்தபோது, அதில் புழு இருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக கணேசன் அளித்த புகாரின் பேரில் பேக்கரிக்கு வந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மற்ற பிஸ்கட்டுகளை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments