ஒரே பிரசவத்தில் ஆறு குட்டிகளை ஈன்ற அதிசய ஆடு... ஆர்வத்துடன் பார்த்து செல்லும் கிராம மக்கள்!

0 28057

புதுக்கோட்டையில் ஒரே பிரசவத்தில் 6 குட்டிகளை ஈன்ற அதிசய ஆட்டை  கீரமங்கலம் பகுதியைச் சேர்ந்த கிராமத்தினர் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

இந்தியாவில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள், நிலமற்றவர்களின் பொருளாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மேம்படுத்துவதில் வெள்ளாடு ஒரு முக்கியமான அங்கமாக விளங்குகிறது. ஊரகப்பகுதிகளில் உள்ள பெரிய அளவிலான மக்களுக்கு வெள்ளாடு வளர்ப்பு என்பது ஒரு லாபகரமான தொழில் ஆகும்.  வெள்ளாட்டுப்பாலில் உள்ள கொழுப்பும் புரதமும் எளிதில் செரிக்கக் கூடிய தன்மையுடைதால், தாய்பாலுக்கு அடுத்த சிறப்புடையதாக பார்க்கப்படுகிறது. சந்தையில் ஒரு வெள்ளாடு எடைக்கு ஏற்ப ரூ. 3000 முதல் 6000 வரை விலை போகிறது. குறைவான முதலீட்டில் அதிக இலாபம் ஈட்ட  முடியும் என்பதால் வெள்ளாடு  வளர்ப்பதில் கிராம மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் நகரம் கிராமத்தில் பழனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் இரண்டு வெள்ளாடுகள் வளர்த்து வந்தார். அந்த வெள்ளாடுகளில் ஒன்று இன்று ஒரே பிரசவத்தில் 6  குட்டிகளை ஈன்றது. நான்கு பெண் குட்டிகள் மற்றும் இரண்டு ஆண் குட்டிகள் பிறந்துள்ள நிலையில்  அனைத்து குட்டிகளும் நலமுடன் இருக்கின்றன. இயல்பாக ஒரு வெள்ளாடு அதிகபட்சமாக மூன்று அல்லது நான்கு குட்டிகளை ஈன்றும் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதனால், 6 குட்டிகளை ஈன்ற  அதிசய வெள்ளாட்டை  ஏராளமான பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments