அ.தி.மு.க. கொடியை சசிகலா உள்பட யாரும் பயன்படுத்தக்கூடாது - போலீசார் எச்சரிக்கை

0 5075

சசிகலா தமிழக வருகையின் போது அவரது வாகனத்திற்கு பின்னால் 5 வாகனங்கள் மட்டுமே வர வேண்டும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட அமமுக செயலாளருக்கு மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அனுப்பியுள்ள கடிதத்தில், தற்போது நிலவும் கோவிட்-19 மற்றும் சட்டம் ஒழுங்கு நிலையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா உள்பட யாரும் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என்றும், அவ்வாறு பயன்படுத்துவது விதிமீறல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பட்டாசு வெடிப்பதற்கும், பேண்ட் வாத்தியங்கள் இசைப்பதற்கும் அனுமதி இல்லை என்றும், கொடி, தோரணங்கள், பேனர்கள் மற்றும் பிளெக்ஸ் பேனர்கள் அனுமதியின்றி வைக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments