நெதர்லாந்தில் கொட்டித் தீர்க்கும் பனிப்பொழிவு : மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்
நெதர்லாந்தில் பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போய் உள்ளது.
சாலைகளில் கொட்டி கிடக்கும் பனியில் சிறுவர்கள் சறுக்கி விளையாடுகின்றனர். 9ஆண்டுகளுக்கு பிறகு இந்த அளவுக்கு பனிப் பொழிவு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் 90கிலோ மீட்டர்வேகத்தில் குளிர்காற்று வீசக்கூடும் என்றும் 20சென்டிமீட்டர் அளவுக்கு பனிப்பொழிவு இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Comments