விவசாயிகளின் பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.16,000 கோடி ஒதுக்கீடு
விவசாயிகளின் பயிர் காப்பீட்டுத் திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் 16 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
இதுகுறித்து வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், PMFBY எனப்படும் பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த 2020 - 2021ம் ஆண்டை விட, நடப்பு நிதியாண்டில் 305 கோடி ரூபாய் அதிகம் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தத் திட்டம் பயிர் விதைப்பில் இருந்து தொடங்கி அறுவடைக்கு பிந்தைய காலம் வரை நடைமுறையில் இருக்கும் எனவும் வேளாண் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
Comments