தமிழகத்தில் கொரோனா பலி ஒன்றாக குறைந்துள்ளது
தமிழகத்தில் புதிதாக, 471 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 498 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
கோவையைச் சேர்ந்த 67 வயது மூதாட்டி மட்டுமே கொரோனாவுக்கு பலியானார். சென்னையில் 151 பேர், புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 20 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் பதிவானதாக குறிப்பிட்டு உள்ள சுகாதாரத்துறை, அரியலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் புதிதாக பாதிப்பில்லை எனத் தெரிவித்துள்ளது.
Comments